Saturday, February 14, 2026

மோட்டோவின் இந்த மாடலுக்கு அமேசான் சேலில் 25% தள்ளுபடி..!!

மோட்டோரோலா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. Motorola Edge 60 Pro ஸ்மார்ட்போனை தற்போது சிறந்த தள்ளுபடி விலையில் வாங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த மாடல் ஏப்ரல் 2025ல் அறிமுகப்படுத்தப்பட்டது. கேமரா மற்றும் பேட்டரி திறன்களில் சிறப்பான அம்சங்களைக் கொண்ட இந்த போன், இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்த விலையில் கிடைக்கிறது.

அமேசான் விற்பனையில் Motorola Edge 60 Proக்கு கணிசமான 25% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால், இந்த போன் தனது MRP-ஐ விட சுமார் ₹9,000 குறைவாக கிடைக்கிறது. 8GB RAM மற்றும் 256GB சேமிப்பு வசதி கொண்ட மாடல் தற்போது ₹27,890க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கு மேலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் கூடுதலாக ₹1,500 வரை தள்ளுபடி பெறலாம். இந்த வங்கி சலுகையுடன் சேர்த்து பார்த்தால், போனின் இறுதி விலை ₹26,390 ஆக குறைகிறது. மொத்தமாக ₹10,609 வரை சேமிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

கேமரா தரம், நீண்டநேரம் நீடிக்கும் பேட்டரி, மற்றும் சக்திவாய்ந்த செயல்திறன் ஆகியவற்றை விரும்புபவர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Related News

Latest News