Thursday, February 12, 2026

என்னை ஒழித்துக்கட்ட சதி நடக்கிறது – அன்புமணி மீது ராமதாஸ் தாக்கு

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட எதை எதையோ பேசுகிறார்கள். ஒரு கூட்டம் பொய் பேசுவதையே அரசியலாக கொண்டு செயல்படுகிறது. அந்த கூட்டத்தை நாங்கள் கட்சியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கி விட்டோம். அவர்களிடம் ஒரு கூட்டம் சேர்ந்து செயல்படுகிறது.

என்னை பற்றி அவதூறாக மனம் புண்படும்படியும், ஏளனமாகவும், பொய்யும், புரட்டுமாக பேசுகின்றனர். எங்களை வசைப்பாடுகிறார்கள். என்னை மட்டுமின்றி அரசியல் அனுபவம் கொண்ட பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணியையும் அவர்கள் வசைப்பாடுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related News

Latest News