உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் திகழ்கிறது. தற்போது உலகம் முழுவதும் கூகுளில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 25 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் வெளியேறியதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், விருப்ப ஓய்வு திட்டத்தை ஏற்காதவர்களில், நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாதவர்கள் மீது பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மறைமுக எச்சரிக்கையும் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், செயல்திறன் மற்றும் வேகத்துக்கு ஏற்ப இயங்க முடியாதவர்கள் அல்லது நிறுவன முடிவுகளுக்கு ஒத்துழைக்காதவர்கள் வெளியேறலாம் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால் அங்கு பணிபுரியும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
