Saturday, February 7, 2026

Live stream-இல் தனது காதலியுடன் இருந்த வீடியோ., ஆபாச வீடியோ தேடியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

சீனாவில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் ஆபாச வீடியோக்களை தேடிக்கொண்டிருந்த போது, ஒரு நபர் தன்னுடைய காதலியுடன் அந்தரங்கமாக இருந்த வீடியோ அதே இணையதளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதைவிட மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில், அந்த வீடியோ அந்த தளத்தில் நேரலையாக (Live Streaming) ஒளிபரப்பப்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.

விசாரணையில், அந்த வீடியோ முன்பு அவர் தனது காதலியுடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த போது, அவர்களுக்கு தெரியாமல் பதிவு செய்யப்பட்டதாக கண்டறியப்பட்டது. ஹோட்டல் அறையின் ஸ்விட்ச் போர்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘ஸ்பை கேமரா’ மூலம் அந்த அந்தரங்க காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன என்பது பின்னர் தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து அந்த நபர் காவல் துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சீன காவல்துறை நடத்திய விசாரணையில், சீனா முழுவதும் பல ஹோட்டல் அறைகளில் இதுபோன்ற ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவது வெளிச்சத்திற்கு வந்தது.

அந்த கேமராக்கள் மூலம் தம்பதிகள் மற்றும் காதலர்களின் அந்தரங்க வீடியோக்கள் ரகசியமாக பதிவு செய்யப்பட்டு, பின்னர் கள்ளச்சந்தையில் ஆபாச இணையதளங்களுக்கு விற்கப்படும் ஒரு பெரிய குற்றவாளிக் கும்பல் செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், இந்த ரகசிய கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படும் காட்சிகள், கட்டணம் செலுத்தும் சந்தாதாரர்களுக்காக சிறப்பு செயலிகள் மற்றும் இணையதளங்கள் மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான தம்பதிகள் மற்றும் தனிநபர்கள் தங்களுக்குத் தெரியாமலேயே இந்த மோசமான குற்றச் செயலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தை மிகக் கடுமையாக எடுத்துக்கொண்டுள்ள சீன காவல்துறை, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. இந்த சம்பவம், தனியுரிமை பாதுகாப்பு மற்றும் ஹோட்டல் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

Related News

Latest News