Wednesday, February 4, 2026

‘தமிழ்நாட்டின் மீதான வெறுப்பின் வெளிப்பாடே மத்திய பட்ஜெட்’ – மு.க ஸ்டாலின் பேச்சு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கொள்ளார் கிராமத்தில் உள்ள சிப்காட் வளாகத்தில், “உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு விழா நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, 1 லட்சத்து 80 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். “என் கனவு என் எதிர்காலம்” என்கிற இணையதளத்தை தொடங்கி வைத்தார். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், பொருளாதார வளர்ச்சியில் இரண்டாம் நிலையில் உள்ள தமிழகத்திற்கு போதிய நிதி வழங்காமல் மத்திய அரசு வெறுப்பு காட்டுவதாக கூறினார். தமிழத்தில் பாஜக வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதால் தான் எந்த திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Related News

Latest News