இன்று நம்மில் பலரும் கூகுள் ஜெமினி (Gemini) போன்ற ஏஐ (AI) செயலிகளை அன்றாடத் தேவைக்காகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். ஒரு சந்தேகம் என்றாலோ, அல்லது ஒரு ஈமெயில் எழுத வேண்டும் என்றாலோ உடனே ஜெமினியைத்தான் நாடுகிறோம். ஆனால், அதில் நாம் பேசும் விஷயங்கள் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்குத் தெரியுமா?
பலரும் நினைப்பது என்னவென்றால், கூகுள் அக்கவுண்ட்டை விட்டு ‘லாக்-அவுட்’ (Sign out) செய்துவிட்டாலே, கூகுள் நம்மை கண்காணிக்காது என்றுதான். ஆனால் உண்மை அதுவல்ல! கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, நீங்கள் லாக்-அவுட் செய்திருந்தாலும் கூட, ஜெமினி உங்களைப் பற்றிய பல தகவல்களைச் சேகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
அப்படி என்ன தகவல்களை எடுக்கிறார்கள்?
முக்கியமாக, உங்கள் ஐபி அட்ரஸ் (IP Address) மூலம் நீங்கள் இருக்கும் இடம், நீங்கள் பயன்படுத்தும் பிரவுசர் தகவல்கள், மற்றும் ஜெமினி செயலியில் நீங்கள் உருவாக்கும் டெக்ஸ்ட், இமேஜ் போன்ற அத்தனை தரவுகளும் சேமிக்கப்படுகின்றன.
இதைவிடப் பெரிய அதிர்ச்சி என்னவென்றால், இந்தத் தரவுகளை மேம்படுத்துவதற்காக, கூகுள் நிறுவனம் ‘Human Reviewers’ எனப்படும் மனிதர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. அதாவது, நீங்கள் ஜெமினியில் டைப் செய்யும் விஷயங்களை, எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு மனிதர் படித்துப் பார்க்கும் வாய்ப்பு உள்ளது!
கூகுள் இதை வெளிப்படையாகவே கூறியுள்ளது: “தயவுசெய்து உங்கள் தனிப்பட்ட ரகசியங்களையோ (Confidential Information), அல்லது மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்று நினைக்கும் விஷயங்களையோ ஜெமினியில் டைப் செய்யாதீர்கள்” என்று அவர்களே எச்சரித்துள்ளனர்.
சரி, இதில் இருந்து நம்மை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது?
கூகுள் செட்டிங்ஸில் உள்ள ‘Gemini Apps Activity’ பகுதிக்குச் சென்று, உங்கள் பழைய சாட் ஹிஸ்டரியை டெலீட் செய்யலாம். மேலும் ‘Auto-delete’ ஆப்ஷனைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தானாகவே அழியும்படி செட் செய்துகொள்ளலாம்.
ஆகவே மக்களே, ஏஐ தொழில்நுட்பம் நமக்கு உதவியாக இருந்தாலும், அதில் பர்சனல் விஷயங்களைப் பகிரும்போது மிக மிகக் கவனமாக இருப்பது நல்லது!
