Monday, February 2, 2026

மும்பையில் பிரபல பாலிவுட் இயக்குநர் வீட்டின் மீது துப்பாக்கி சூடு!

பாலிவுட்டில் சிங்கம், சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் ரோஹித் ஷெட்டி. இந்த நிலையில், மும்பையிலுள்ள ரோஹித் ஷெட்டியின் இல்லத்தில் நேற்று (பிப். 1) 4 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இது குறித்து விசாரணையில் இறங்கிய காவல்துறை அந்தக் கும்பலைக் கைது செய்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், இவர்கள் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னாயின் கூட்டாளிகள் எனத் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News