நாட்டின் கிழக்கு – மேற்கு பகுதிகளை இணைக்க பிரத்யேக சரக்கு ரயில் பாதை அமைக்கப்படும் என பட்ஜெட் உரையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
2 ஆம், 3 ஆம் நிலை நகர உள்கட்டமைப்பு ரூ. 12.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கடலோர சரக்கு போக்குவரத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு.
2 ஆவது, 3 ஆவது நிலை நகரங்கள், கோயில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
சென்னை – பெங்களுரு, சென்னை – ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் தடம் அமைக்கப்படும்.
மும்பை – புணே, புணே- ஹைதராபாத், ஹைதராபாத் – பெங்களூரு, ஹைதராபாத் – சென்னை, சென்னை – பெங்களூரூ, பெங்களூரு – வாரணாசி, வாரணாசி – சிலிகுரி ஆகிய நகரங்களுக்கு இடையே 7 அதிவேக ரயில் தடங்கள் அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
