கொலம்பியாவில் விமான விபத்து – எம்.பி. உள்பட 15 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் உள்ள நார்டே டி சண்டாண்டர் பகுதியில், ஒரு சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் 13 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் என மொத்தம் 15 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் கொலம்பியா மாகாணத்தின் கீழ்சபை உறுப்பினர் எம்.பி. குவிண்டெரோ உயிரிழந்துள்ளார்.

வரவுள்ள தேர்தலில் போட்டியிட இருந்த சால்சிடோ என்பவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related News

Latest News