Tuesday, January 27, 2026

ஏடிஎம்மில் 10 ரூபாய் நோட்டுகள் அறிமுகம்? – மத்திய அரசு எடுக்கும் அதிரடி முடிவு

ஏடிஎம்களில் 10 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்திட, மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.

1 ரூபாயை கூட எளிதாக பரிவர்த்தனை செய்யலாம் என்பதால், யுபிஐ பயன்பாடு இந்தியாவில் நாளுக்குநாள் தங்கம் விலை போல அதிரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் ஏடிஎம்களில் 200 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளே அதிகம் புழக்கத்தில் இருக்கின்றன. இதன் காரணமாக மக்களுக்கு அதிகம் பயன்படும் 10, 20, 50 ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்தநிலையில் பொதுமக்களுக்கு அதிகம் தேவைப்படும் இந்த நோட்டுகளை, ஏடிஎம்களில்அறிமுகம் செய்திட மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறதாம். இதற்காக வழக்கமாக 100, 500 ரூபாய் நோட்டுகளை வழங்கும் ஏடிஎம்களுக்குப் பதிலாக, சிறிய நோட்டுகளை வழங்கும் புதிய ஏடிஎம்களை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இது மட்டுமின்றி பெரிய நோட்டுகளைச் சிறிய நோட்டுகளாக மாற்றிக்கொள்ள உதவும், ஹைபிரிட் ஏடிஎம்களையும் கொண்டுவர அரசு ஆலோசித்து வருகிறது.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மும்பையில் தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. எனவே விரைவில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மத்திய அரசின் இந்த முயற்சியை ஊக்குவிக்கும் பொருட்டு ரிசர்வ் வங்கி சிறிய மதிப்பிலான நோட்டுகளை அச்சிட முடிவு செய்திருக்கிறதாம். இதனால் சிறிய ரூபாய் நோட்டுகளுக்கான தட்டுப்பாடு விரைவில் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Related News

Latest News