பிரபாஸ் நடித்த ‘தி ராஜாசாப்’ திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியானது. இதில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இந்த படத்தின் கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் தரத்திற்கு நெருக்கமாக உருவாக்கப்பட்டுள்ளதாக பேசப்பட்டது.
மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என விமர்சனங்கள் வெளியானாலும், உலகளவில் ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ‘தி ராஜாசாப்’ படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் ரூ.80 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும், பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
