77-வது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கேரளா மாநிலம் கண்ணூரில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது, அம்மாநில தொல்லியல் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்த காவலர்கள், அவரை தாங்கி பிடித்தனர். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
