Wednesday, February 4, 2026

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் – மக்கள் அவதி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் மேடைகள் அமைக்கப்பட்டு, பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திண்டிவனம், விழுப்புரம், மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வாகனங்களில் தொடர்ந்து விழா நடைபெறும் இடத்துக்கு வருகை தந்து வருகின்றனர். இதன் காரணமாக திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து நெரிசலால் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுக்கூட்டம் நடைபெறும் திடலை நோக்கி அதிக அளவில் வாகனங்கள் சென்றதால், திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் நெரிசலாக காணப்படுகின்றன.

Related News

Latest News