நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த டாம்டாம் (TomTom) என்ற தொழில்நுட்ப நிறுவனம், 2025-ம் ஆண்டில் உலக அளவில் அதிக நெரிசலான நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் இருக்கக்கூடிய சராசரி பயண நேரம் மற்றும் நெரிசல் நிலைகள் தொடர்பாக கடந்த 2025-ம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில், இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரமான பெங்களூரு 2வது இடத்தைப் பிடித்துள்ளது. முதலாவது இடத்தில் மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டி உள்ளது. 3-வது இடத்தில் அயர்லாந்து தலைநகரான டப்ளின் உள்ளது.
இந்த பட்டியலில், முதல் 35 இடங்களில் புனே, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர் உள்ளது. 32-வது இடத்தில் சென்னை உள்ளது குறிப்பிடத்தக்கது.
