சுதா கொங்கரா – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான ‘பராசக்தி’ திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருந்ததால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலித்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்தனர்.
இந்நிலையில், பராசக்தி திரைப்படம் பிப்ரவரி மாத இறுதியில் ஓடிடியில் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 ஓடிடி தளம் கைப்பற்றி இருந்தது. பிப்ரவரி மாத இறுதியில் பராசக்தி திரைப்படம் ஜீ5 ஓடிடிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
