சென்னை வேளச்சேரி நேருநகர், அண்ணா தெருவில் பொதுமக்கள் காலி இடம் ஒன்றின், சாலையோரம் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அந்த இடத்தில் இன்று தூய்மை பணியாளர் குப்பைகளை சேகரிக்க வந்த போது அங்கு இரண்டு பைகள் இருந்தது.
அந்த பையை திறந்து பார்த்த போது அதில் 2000 ரூபாய் தாள்களும், 500 ரூபாய் தாள்களும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் வந்த வேளச்சேரி போலீஸார் இரண்டு பணப் பைகளையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச் சென்றனர். அந்த பைகளில் கட்டுக் கட்டாக 2000 ரூபாய் நோட்டுகளும், 500 ரூபாய் நோட்டுகளும் இருந்தது.
இரண்டு பைகளில் இருந்த பணம் நல்ல நோட்டா? அல்லது கள்ள நோட்டா? யார் வீசிச் சென்றது, என பல்வேறு கோணங்களில் வேளச்சேரி போலீஸார் விசாரித்து வருகின்றனர். குப்பையில் வீசப்பட்ட பணப்பை விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
