ஜியோ ஹாட்ஸ்டார் பயனர்கள் வருகிற ஜனவரி 28-ஆம் தேதிக்குள் ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். காரணம், ஜியோஹாட்ஸ்டார் சேவையின் கீழ் ரூ.79 மதிப்புள்ள புதிய பிளான் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டதுடன், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த சூப்பர் மற்றும் பிரீமியம் சந்தா திட்டங்களின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. ஜியோஹாட்ஸ்டார் அறிவித்துள்ள இந்த புதிய மாற்றங்கள் அனைத்தும் 2026 ஜனவரி 28-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன.
இதற்கிடையில், “மிகவும் மலிவான விலையில்” ஜியோ சேவையின் கீழ் இலவச நெட்பிளிக்ஸ் சந்தாவுடன் ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவையும் ஒரே நேரத்தில் வழங்கும் ஒரு சிறப்பு திட்டமும் உள்ளது. இந்த திட்டத்தை சரியாக தேர்வு செய்தால் பயனர்களுக்கு கணிசமான அளவில் பணம் மிச்சமாகும்.
விலை உயர்த்தப்பட்ட ஜியோஹாட்ஸ்டார் திட்டங்களைப் பார்த்தால், ரூ.299-க்கு கிடைத்த 3 மாத கால ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் திட்டம் தற்போது ரூ.349 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ரூ.899-க்கு வழங்கப்பட்ட 1 ஆண்டு ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் திட்டத்தின் விலை ரூ.1099 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரூ.499-க்கு கிடைத்த 3 மாத ஜியோஹாட்ஸ்டார் பிரீமியம் திட்டத்தின் விலை ரூ.699 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடைசியாக, ரூ.1499-க்கு கிடைத்த 1 ஆண்டு ஜியோஹாட்ஸ்டார் பிரீமியம் திட்டத்தின் விலை ரூ.2199 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜியோஹாட்ஸ்டார் அறிவித்துள்ள இந்த புதிய மாற்றங்கள் வருகிற 2026 ஜனவரி 28 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன.
