கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சிபிஐ தற்போது விசாரித்து வருகிறது.
முதற்கட்டமாக கரூரில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள், தற்போது இந்த வழக்குடன் தொடர்புடைய அனைவரையும் சிபிஐ விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்யிடமும் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி 6 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, இன்று இரண்டாவது முறையாக காலை 11 மணி முதல் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 6 மணி நேரம் நடைபெற்று வந்த விசாரணை தற்போது நிறைவடைந்துள்ளது.
