பீகாரில் ஜே.டி.(யு) கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ அனந்த் சிங்கின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் மருத்துவமனைக்குள் புகைபிடிப்பது போல பதிவாகியுள்ளது. அவரது இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த காட்சிகள் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (IGIMS) எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த அனந்த் சிங், மருத்துவ பரிசோதனைக்காக அங்கு அழைத்து வரப்பட்டபோது இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
