இபிஎப்ஓ எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்துக்கொண்டு, மீதமுள்ள பணத்தை அவசர தேவைக்காக எடுக்கும் வசதி ஏற்கனவே உள்ளது.
தற்போது, உறுப்பினர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி தொகையை வங்கி வழியாக பெற்றுக்கொள்ளும் முறையே நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல், தங்களுடைய தொகையை ‘யு.பி.ஐ.’ மூலம் நேரடியாக வங்கிக்கணக்கில் பெறும் புதிய வசதி அறிமுகமாக உள்ளது.
இந்த புதிய முறையின்படி, வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், தங்களுக்கு கணக்கில் இருந்து பெற தகுதியான தொகையை, தங்களது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட ‘யு.பி.ஐ.’ மூலம் நேரடியாக மாற்றிக்கொள்ள முடியும். பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ‘யு.பி.ஐ.’ பின் (PIN) பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
