மத்திய இணையமைச்சர் எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பராசக்தி திரைப்படக் குழுவினர் கலந்துகொண்டதை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
மத்திய இணையமைச்சர் எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்களுடன் நடிகர்கள் ரவி மோகன், சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் உள்ளிட்ட பராசக்தி படக்குழுவினரும் பங்கேற்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெளியிட்ட பதிவில், “சங்கிக் குழு பொங்கலில் பராசக்தி குழு. ஆனால் ஜன நாயகனை தடை செய்துள்ளார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
