கடந்த சில நாட்களாக தங்க விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ரூ.13,120க்கும், சவரன் ரூ.1,760 அதிகரித்து ரூ.1,04,960க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 அதிகரித்து ஒரு கிராம் ரூ.287க்கும் ,கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,87,000 ஆக விற்பனையானது.
இந்நிலையில் இன்று தங்க விலை அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் சவரன் ரூ.400 அதிகரித்து ரூ.1,05,360க்கும், கிராம் ரூ.50 உயர்ந்து ரூ.13,170க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளியும் உச்சத்தை எட்டியுள்ளது. இன்று கிலோ ரூ.5,000 அதிகரித்து ரூ.2,92,000க்கும், கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.292க்கும் விற்பனை. கடந்த 3-ந்தேதி கிலோ ரூ.2,57,000 ஆக இருந்த வெள்ளி, 11 நாட்களில் ரூ.35,000 உயர்ச்சி கண்டுள்ளது.
