Monday, January 12, 2026

அதிவேக டேட்டா, அதிக வேலிடிட்டி, jio வின் பொங்கல் சிறப்பு ஆபர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு jio, தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு சிறப்பு ரீசார்ஜ் ஆஃபரை அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் அதிகபட்ச வேலிடிட்டி, அதிக டேட்டா உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் வழங்கப்படுகின்றன.

இந்த சிறப்பு திட்டத்தின் விலை ரூ.450 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை சிறப்பு சலுகையாக இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப்போது இந்த திட்டத்தின் முழு விவரங்களை பார்க்கலாம்.

Jio ரூ.450 திட்டத்தின் விவரங்கள்

ஜியோவின் ரூ.450 திட்டம் 36 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதில் தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படும். அதாவது மொத்தமாக 72 ஜிபி டேட்டா கிடைக்கும். தினசரி டேட்டா வரம்பு முடிந்த பிறகு, இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.

இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வசதியும், தினமும் 100 இலவச SMS வசதியும் வழங்கப்படுகிறது. தகுதியான வாடிக்கையாளர்கள், சாதன இணக்கத்தன்மை மற்றும் தங்களின் பகுதியில் 5G நெட்வொர்க் கிடைப்பதைப் பொறுத்து, Jio True 5G சலுகையின் கீழ் வரம்பற்ற 5G டேட்டாவையும் பயன்படுத்தலாம்.

கூடுதல் நன்மைகள்:

இந்த திட்டத்தில் 50 ஜிபி இலவச கிளவுட் ஸ்டோரேஜுடன் Jio AI Cloud அணுகல் வழங்கப்படுகிறது. மேலும், 3 மாதங்களுக்கு Jio Hotstar மொபைல் / டிவி சப்ஸ்க்ரிப்ஷன் வழங்கப்படுகிறது. அதேபோல், Jio TV பயன்பாட்டிற்கான அணுகலும் இதில் அடங்கும்.

AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஜியோ இந்த திட்டத்தில் AI சார்ந்த சிறப்பு நன்மையையும் சேர்த்துள்ளது. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதியான வாடிக்கையாளர்களுக்கு ரூ.35,100 மதிப்புள்ள Google Gemini Pro-வின் 18 மாத இலவச சப்ஸ்க்ரிப்ஷன் வழங்கப்படுகிறது.

Related News

Latest News