Tuesday, January 13, 2026

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,800க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,03,200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியின் விலை, ஒரு கிலோ வெள்ளி ரூ.7,000 உயர்ந்து ரூ.2,75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.7 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.275க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related News

Latest News