Tuesday, January 27, 2026

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் இந்திய ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில் – தாம்பரம் வழித்தடத்தில் சிறப்பு ரயில் எண் 06012 ஜனவரி 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரத்தை அடையும்.

அதேபோல், தாம்பரம் – குமரி சிறப்பு ரயில் எண் 06011 ஜனவரி 12 மற்றும் 19 தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு குமரியை சென்றடையும்.

குமரி – தாம்பரம் – நாகர்கோவில் வழித்தடத்தில் சிறப்பு ரயில் எண் 06054 ஜனவரி 13 மற்றும் 20 தேதிகளில் குமரியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

அதே போல, தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் எண் 06053 ஜனவரி 14 மற்றும் 21 தேதிகளில் மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

நெல்லை – செங்கல்பட்டு வழித்தடத்தில் சிறப்பு ரயில் எண் 06156 ஜனவரி 9 மற்றும் 16 தேதிகளில் நெல்லையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டையை அடையும்.

அதே தேதிகளில், செங்கல்பட்டில் இருந்து நெல்லைக்குச் செல்லும் சிறப்பு ரயில் எண் 06155 மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 2 மணிக்கு நெல்லையை வந்தடையும்.

நெல்லை – செங்கல்பட்டு சிறப்பு ரயில் எண் 06158 ஜனவரி 10 மற்றும் 17 தேதிகளில் நெல்லையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும்.

அதே தேதிகளில், செங்கல்பட்டில் இருந்து நெல்லைக்கு செல்லும் சிறப்பு ரயில் எண் 06157 மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு நெல்லையை வந்தடையும்.

பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

பண்டிகை காலத்தில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், முன்பதிவு செய்யாத பயணிகளுக்காக பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படுகிறது. பயணிகள் ரயில் நிலையங்கள் அல்லது ரயில்வே இணையதளம் மூலம் ரயில் நேரங்கள் மற்றும் முன்பதிவு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Related News

Latest News