தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் நேற்று அதிரடியாக உயர்ந்தது. நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,580-க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,640-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,00,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.12,520 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.254க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,56,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
