தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்தது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று தங்கத்தின் விலை, ஒரு கிராம் ரூ.12,440-க்கும், ஒரு சவரன் ரூ.92,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,580-க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,640-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.260-க்கும் பார் வெள்ளி ரூ.2,60,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
