ஜனவரி மாதத்திற்கான வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை ரூ.110 உயர்ந்து ரூ.1,849.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனையாகிறது.
கடந்த 2 மாதங்களாக வணிக சிலிண்டர் விலை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
