வருடத்தின் முதல் நாளில் அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளியின் விலை

நேற்று காலை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.12,550-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, நேற்று மதியம் மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.99,840 க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ. 12,480 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.12,440-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.92,520-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இன்று குறைந்து உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.256-க்கும் பார் வெள்ளி ரூ.2,56,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News