பிஎஸ்என்எல் (BSNL) சிம் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மிக முக்கியமான அறிவிப்பு! கூடிய விரைவில் இந்தியா முழுவதும் பிஎஸ்என்எல் தனது 3ஜி (3G) சேவையை மொத்தமாக நிறுத்தத் திட்டமிட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான பழைய மொபைல் பயனர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஏன் இந்த திடீர் முடிவு?
பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது முழு மூச்சாகத் தனது 4ஜி (4G) நெட்வொர்க்கை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. அடுத்து 5ஜி சேவையையும் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. அதனால், பழைய 3ஜி தொழில்நுட்பத்தைப் பராமரிப்பதில் நேரத்தையும் பணத்தையும் செலவழிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.
இதற்காக, 3ஜி சேவையைப் பராமரித்து வந்த நோக்கியா (Nokia) மற்றும் இசட்.டி.இ (ZTE) நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தையும் ரத்து செய்யப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் இன்னும் பழைய 3ஜி சிம் கார்டு அல்லது 3ஜி மொபைல் பயன்படுத்திக் கொண்டிருந்தால், உடனே உஷாராகுங்கள்! உங்கள் ஏரியாவில் 4ஜி சேவை வந்த பிறகு, 3ஜி கட் செய்யப்படும். அப்போது உங்கள் போனில் இன்டர்நெட் வேலை செய்யாது, கால்களும் கட் ஆகலாம்.
இதைத் தவிர்க்க ஒரே வழி… உடனே அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்திற்குச் சென்று, உங்கள் பழைய சிம் கார்டை “4ஜி சிம்”-ஆக மாற்றிக்கொள்ளுங்கள் (Upgrade to 4G). இது முற்றிலும் இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த கட்டணத்திலோ செய்து தரப்படும்.
ஏற்கனவே டிசம்பர் 10-ம் தேதி இது குறித்த உத்தரவு அதிகாரிகளுக்குப் போய்விட்டது. 4ஜி வேலை நடக்கும் இடங்களில் 3ஜி-யை நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே கடைசி நேரம் வரை காத்திருக்காமல், இப்பவே 4ஜிக்கு மாறிடுங்க! வேகமான இன்டர்நெட்டையும் என்ஜாய் பண்ணுங்க!
