திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி பகுதியில் வசிக்கும் 47 வயது தொழிலாளி ஒருவருக்கு 14 வயது மகள் உள்ளார். பாதுகாப்பு வழங்கவேண்டிய தந்தையே தனது மகளை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதில் அந்தச் சிறுமி 7 மாத கர்ப்பமாக இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த தந்தையை கைது செய்தனர்.
7 மாத தொடர்ச்சியான விசாரணைக்குப் பிறகு, இன்று மதியம் 12 மணியளவில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
குற்றம் நடந்த 7 மாதங்களுக்குள் குற்றவாளி தூக்கு தண்டனை பெற்றிருப்பதை, காவல் துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
