Saturday, December 20, 2025

கடுமையான பனிமூட்டம் : சென்னையில் 7 விமானங்கள் ரத்து

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து கடுமையான பனி மூட்டத்துடன் மோசமான வானிலை நிலவி வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, வாரணாசி போன்ற இடங்களுக்கு இயக்கப்படும் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டெல்லியில் இருந்து சென்னை வர வேண்டிய ஏர் இந்தியா, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களும் இதில் அடங்கும்.

அதேபோல் ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள், 2 மணிநேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் சென்னை விமானநிலையத்தில் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Related News

Latest News