சென்னை, பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார கஞ்சா புழக்கம் உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பூந்தமல்லி மதுவிலக்கு ஆய்வாளர் சுபாஷினி தலைமையிலான போலீசார், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமாக நபரை மடக்கி சோதனை செய்ததில் அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நீலாங்கரையை சேர்ந்த ராகுல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நந்தலால் உரோன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
