Saturday, December 20, 2025

விஜய்க்கு ஓட்டு போடலைனா சோத்துல விஷம் வச்சுருவேன் – குடும்பத்தையே மிரட்டிய பெண் ரசிகை

ஈரோட்டில் மக்கள் சந்திப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தவெக தலைவர் விஜய், திமுகவை சரமாரியாக தாக்கி பேசினார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சொன்னது போல் திமுகவை தீய சக்தி என்று குறிப்பிட்ட விஜய், தீய சக்திக்கும், தவெக என்னும் தூய சக்திக்கும் இடையே தான் தேர்தலில் போட்டி என்று தெரிவித்தார்.

இந்நிலையில் பெண் ரசிகை ஒருவர் பேசிய பேச்சு வைரலாகிறது. அவர் பேசியதாவது : நான் இரண்டு முறை ஓட்டு போட்டுள்ளேன். முதலில் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டேன். அப்புறம் சீமானுக்கு ஓட்டு போட்டேன். இனி விஜய்க்கு ஓட்டு போடுவேன்.

எங்கள் வீட்டில் 9 பேர் உள்ளனர். அவர்களும் விஜய்க்கு தான் ஓட்டு போடுவார்கள். அப்படி அவர்கள் ஓட்டு போடவில்லை என்றால் சோற்றில் விஷம் வைத்து விடுவேன் என பேசியுள்ளார்.

Related News

Latest News