நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஒரு அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிலர் சீருடையில் மதுபானத்தை அருந்தும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பள்ளியின் விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் சிலர் இந்த செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பள்ளியில் உள்ள விடுதியில் தற்போது பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அங்குள்ள மாணவிகள் அருகில் காலியாக இருந்த வகுப்பறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகுப்பறையில் வைத்துதான் மது அருந்தியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 6 மாணவிகளை பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டப்பட்டுள்ளது.
அதேவேளையில் பள்ளி மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்தது யார்? விடுதியில் இருந்து யாராவது வாங்கி கொடுத்தார்கள்? அல்லது மாணவிகளே வெளியில் சென்று வாங்கி வந்தார்கள்? என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பள்ளி வகுப்பறையில் மாணவிகள் மது அருந்திய சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
