நாடு முழுவதும் பறந்த வானிலை எச்சரிக்கை! தப்புமா தமிழகம்?

இந்தியா முழுவதிலும் பல பகுதிகளில் கடுமையான குளிர் அலை மற்றும் அடர்ந்த மூடுபனி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையமான IMD எச்சரித்துள்ளது. இந்த ஆண்டு பருவமழை, கடந்த சில ஆண்டுகளை விட அதிக மழைப்பொழிவைக் கொண்டிருந்தது. பல மாநிலங்களில் இயல்பை விட அதிக மழை பதிவாகியதால், பருவமழை சீசன் தீவிரமாகவே இருந்தது.

கனமழை காரணமாக பருவமழை காலம் நல்ல மழை பொழிவை தந்ததோடு, அது விலகிய பின்னரும் பல மாநிலங்களில் மழை தொடர்ந்து பெய்தது. இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 10 முதல் 13 வரை பல மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

வழக்கத்தை போலவே இந்த ஆண்டும், பருவமழை முதலில் கேரளாவில் துவங்கியது. அது விலகியபின்னரும் அங்கு மழை தொடர்ந்த நிலையில், அடுத்த நான்கு நாட்களிலும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில் புழுதிப் புயல் உருவாகும் சாத்தியமும் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நாடு முழுவதும் வானிலை மாற்றம் காணப்படும் நிலையில் கர்நாடகாவின் சில மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் இடைவிடாமல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டிலும் பருவமழை காலத்தில் போதிய அளவு மழை பதிவாகியது. பருவமழை முடிந்தபின்னரும் மழை நீடித்த நிலையில், டிசம்பர் 10 முதல் 13 வரை மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை ஏற்படும் வாய்ப்பு அதிகம் என IMD எச்சரித்துள்ளது. மேலும் இந்த நாட்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News