மத்திய அரசு சமீபத்தில் புதிய விமான பணி நேர வரம்பு விதிமுறைகளை அமல்படுத்தியது. இதன் காரணமாக பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு இண்டிகோ நிறுவனம் கடந்த வாரத்தில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகளை ரத்து செய்தது. இதனால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இண்டிகோ விமானங்களின் ரத்து மற்றும் தாமதம் காரணமாக பயணிகள் ஏற்பட்ட பதட்டத்தை கருத்தில் கொண்டு, டிஜிசிஏ (DGCA) முக்கிய வழித்தடங்களில் இண்டிகோவின் சேவைகளை 5% குறைக்க உத்தரவிட்டுள்ளது. அதாவது, ஒரு நாளைக்கு சுமார் 115 விமான சேவைகள் ரத்து செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது.
இண்டிகோ விமான சேவைகள் நிறுத்தப்படும் வழித்தடங்களில் மற்ற நிறுவனங்களின் விமானங்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
