கரூர் சம்பவம் நடந்த 73 நாட்களுக்கு பின் விஜய் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பை நடத்தினார். காலை முதலே புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் தவெக தொண்டர்களும், பொதுமக்களும் குவிந்தனர்.
அப்போது மாநாட்டில் பேசிய அவர், ‘‘தமிழ்நாடு ஒரு தனி மாநிலம். புதுச்சேரி ஒரு தனி யூனியன் பிரதேசம். அவங்களுக்கு தான் தமிழ்நாடு, தனி புதுச்சேரி தனி. இப்படிலாம் இருப்பாங்க. ஆனால் நமக்கு அப்படி கிடையாது. தமிழ்நாடும், புதுச்சேரியும் தனித்தனியாக இருந்தாலும் நாம் எல்லாரும் ஒன்றுதான். நாம் எல்லாரும் சொந்தம்தான்.
தமிழ்நாட்டை ஒதுக்குற மாதிரி, புதுச்சேரி ஒதுக்க கூடாது. யூனியன் பிரதேசமான புதுச்சேரி மத்திய நிதி குழுவில் இடம் பெறவில்லை. இந்த திமுகவை நம்பாதீங்க. உங்கள நம்ப வச்சு ஏமாத்துறது தான் அவங்க வேலையே.
வரப்போகும் புதுச்சேரி தேர்தல் களத்தில் நம்மளுடைய தமிழக வெற்றி கழகத்தின் கொடி பட்டொளி வீசி பறக்கும். நல்லதே நடக்கும்’’ என அவர் தெரிவித்தார்.
