புதுச்சேரி உப்பளம் துறைமுக திடலில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்தை புதுவை காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங் கடுமையாக எச்சரிக்கை விடுத்த காணொலி வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.
க்யூஆர் கோட் உள்ள அனுமதிச் சீட்டு உள்ளவர்களை மட்டுமே காவல்துறையினர் திடலுக்குள் அனுமதித்து வருகின்றனர். இந்த நிலையில், க்யூஆர் கோட் அனுமதிச் சீட்டு இல்லாத தொண்டர்கள் சிலரை அனுமதிக்கக் கோரி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்பி ஈஷா சிங்கிடம் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.
இதனால் கோபமடைந்த எஸ்பி ஈஷா சிங், “நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கு நீங்கள் சொல்லித் தராதீர்கள். உங்களால் பலர் இறந்துள்ளார்கள்.” என ஆக்ரோஷமாக பேசும் விடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன.
