Monday, January 26, 2026

சோதனை மேல் சோதனை., இண்டிகோ விமானத்திற்குள் பறந்த புறா

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளால் இண்டிகோ விமான சேவை ஏற்கனவே நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் முன்பதிவு செய்திருந்த ரூ.600 கோடிக்கும் அதிகமான பணத்தை இண்டிகோ நிறுவனம் திரும்ப கொடுத்திருக்கிறது.

இந்நிலையில் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து வதோதராவிற்கு புறப்பட இண்டிகோ விமானம் ஒன்று தயாராக இருந்தது. அப்போது விமானத்திற்குள் புறா ஒன்று பறந்து வந்துள்ளது. புறாவுக்கு எப்படி வெளியே செல்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தது.

விமான பணிப்பெண்களோடு சேர்ந்து சில பயணிகளும் புறாவை பிடிக்க முயன்றனர். பின்னர் ஒருவழியாக போராடி புறாவை பிடித்து வெளியில் விரட்டினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related News

Latest News