இனி ஆதார் கார்டுல இந்த தப்ப பண்ணாதீங்க! மத்திய அரசின் அரசின் புதிய விதி!

இந்தியாவில் நாம் வைத்திருக்கும் மிக முக்கியமான அடையாள அட்டைகளில் ஒன்று, ஆதார் அட்டை. இந்த ஆதார் அட்டை தொடர்பான ஒரு சூப்பரான, அதே சமயம் மிக முக்கியமான ஒரு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இனிமேல், ஹோட்டல்களிலோ, அல்லது வேறு எந்த இடத்திலுமோ, உங்கள் ஆதார் அட்டையை ஜெராக்ஸ் எடுத்துக் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை.

விரைவில் அமலுக்கு வரவிருக்கும் இந்த புதிய விதியின்படி, ஹோட்டல்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என யாரும், வாடிக்கையாளர்களின் ஆதார் அட்டையை ஜெராக்ஸ் காப்பியாக வாங்கக் கூடாது. அதற்குப் பதிலாக, டிஜிட்டல் முறையில்தான் அடையாளத்தைச் சரிபார்க்க வேண்டும். அதாவது, ஆதார் அட்டையில் இருக்கும் QR கோடை ஸ்கேன் செய்வது, அல்லது ஆதார் செயலி (App) மூலம் சரிபார்ப்பது போன்ற முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

ஒருவரின் ஆதார் கார்டு ஜெராக்ஸை, இன்னொருவர் வாங்கி வைப்பது, ஆதார் சட்டப்படி ஒரு குற்றமாகும். மேலும், இப்படி ஜெராக்ஸ் எடுப்பதால், நமது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படவும், தவறாகப் பயன்படுத்தப்படவும் அதிக வாய்ப்புள்ளது. இந்த ஆபத்துக்களைத் தடுப்பதற்காகவே, இந்த புதிய டிஜிட்டல் சரிபார்ப்பு முறையை அரசு கட்டாயமாக்கப் போகிறது.

இதுகுறித்து பேசிய ஆதார் ஆணையத்தின் (UIDAI) தலைமைச் செயல் அதிகாரி புவனேஷ் குமார், “இந்த புதிய விதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது. விரைவில், இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். ஆதார் சரிபார்ப்பு செய்யும் ஹோட்டல்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும், இந்த புதிய டிஜிட்டல் முறையில் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம், காகிதப் பயன்பாடு குறைக்கப்பட்டு, மக்களின் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்,” என்று கூறியுள்ளார்.

இந்த புதிய முறைக்காக, ஆதார் ஆணையம் ஒரு புதிய செயலியையும் உருவாக்கி வருகிறது. இந்தச் செயலி மூலம், ஒவ்வொரு முறையும் மத்திய சர்வரில் இணைக்காமலேயே, செயலிக்கு செயலி சரிபார்ப்பு செய்துகொள்ள முடியும். விமான நிலையங்கள், கடைகள் போன்ற இடங்களிலும் இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம்.

ஆக, இனிமேல் உங்கள் ஆதார் அட்டை உங்கள் கையில் இன்னும் பாதுகாப்பாக இருக்கும். ஆதார் ஜெராக்ஸ் என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. இந்த புதிய டிஜட்டல் முறை, நமது தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதோடு, நமது அலைச்சலையும், நேரத்தையும் மிச்சப்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Related News

Latest News