தொடங்கியது அடுத்த போர்., சர்வதேச அரங்கில் மீண்டும் பதற்ற நிலை.!

தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லைப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இன்று அதாவது டிசம்பர் 8 அதிகாலை கம்போடியா துருப்புகள் தாய்லாந்து படையின்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தாய்லாந்து ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த திடீர் தாக்குதலில் ஒரு தாய்லாந்து சிப்பாய் உயிரிழந்ததுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கம்போடியாவின் தாக்குதலை அடக்குவதற்காக தாய்லாந்து வான்படை விமானங்கள் மூலம் பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என ராணுவ செய்தித் தொடர்பாளர் விந்தாய் சுவாரி அறிவித்தார்.

இதற்கு பதிலளித்த கம்போடிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாலி சோச்சியாட்டா, ‘இன்று அதிகாலை பிரியா விஹார் மற்றும் ஒட்டார் மீஞ்சே எல்லை மாகாணங்களில் கம்போடிய தளபாடங்கள் மீது தாய்லாந்து படைகள் தாக்குதல் நடத்தின.

தமோன் தாம் கோயிலும், பிரியா விஹார் கோயிலுக்கும் அருகிலுள்ள பகுதிகளிலும் தாய்லாந்து டாங்கிகள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஆனால் கம்போடியா எந்தவித பதிலடி தாக்குதலும் நடத்தவில்லை’ என்று கூறினார்.

அதேபோல், பல நூற்றாண்டுகள் பழமையான தமோன் தாம், தா க்ராபேய் கோயில்கள் இருக்கும் பகுதிகளில் சூடு ஏற்பட்டதாகவும், எல்லை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தப்பிச் செல்வதாகவும் கம்போடிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மோதல் அதிகரித்ததைத் தொடர்ந்து, எல்லை பகுதிகளில் இருந்து தாய்லாந்து சுமார் 35,000 பேரை அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளது என தாய்லாந்து ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்திலும் இரு நாடுகளுக்கிடையில் ஏற்பட்ட போர்சூழலில் 48 பேர் உயிரிழந்ததுடன், 3 லட்சம் மக்கள் தற்காலிகமாக இடம்பெயர்ந்தனர். போர் நிலை மீண்டும் உருவாகும் சூழல் சர்வதேச அச்சத்தை அதிகரித்துள்ளது.

Related News

Latest News