கடந்த 2017ம் ஆண்டு அதிர வைக்கும் ஒரு சம்பவம் நடைபெற்றது. அப்போது ஓடும் காரில் பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். காரில் கடத்தப்பட்ட அந்த நடிகை, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு இயக்குநர் வீட்டின் அருகே விடப்பட்டார்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இந்தச் சம்பவத்தில் பிரபல மலையாள நடிகர் திலீப்பிற்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 2017 ஜூலை 10ம் தேதி திலீப் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து வந்தது. வழக்கின் விசாரணை 2018ம் ஆண்டு தொடங்கிய நிலையில், அதன் பிறகு கொரோனா காரணமாக இரு ஆண்டுகள் வழக்கு விசாரணை முடங்கியது.
இந்தச் சூழலில் தான் வழக்கில் எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய A1 to A6 குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் போதிய ஆதாரம் இல்லை என சொல்லி, திலீப் குற்றவாளி இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
