Monday, December 8, 2025

தமிழகத்தில் 7 நாட்களுக்கு வானிலை இப்படி தான் இருக்கும்

தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாற்றம் காரணமாக, இன்று முதல் வரும் 9ஆம் தேதி வரை தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வரும் 10 முதல் 13ஆம் தேதி வரை தமிழகமும், புதுச்சேரி–காரைக்காலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை வானிலை:

இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

  • அதிகபட்ச வெப்பநிலை: சுமார் 30°செ
  • குறைந்தபட்ச வெப்பநிலை: சுமார் 24°செ

கடலோர எச்சரிக்கை:

தென்தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் மணிக்கு 35–45 கிமீ வேகத்தில், இடையிடையே 55 கிமீ வரை சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

Related News

Latest News