கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுத்தை தாக்கி சிறுவன் உயிரிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள அய்யர் பாடி எஸ்டேட்டில், வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த 5 வயது சிறுவனை, சிறுத்தை கவ்வி தூக்கிச் சென்றது. உடனடினயாக வனத்துறை மற்றும் வால்பாறை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த வனத்துறையினர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு சிறுவன் தேயிலை தோட்டத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், ஆட்கொல்லி சிறுத்தயை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
