கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளராக பேராசிரியர் ரூபா குணசீலன் என்பவர் பொறுப்பு வகித்து வந்தார். இவர் தனது பதவி காலத்தின்போது விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகவும், பல்கலைக்கழக நிதிக்குழு மற்றும் சிண்டிகேட் ஒப்புதல் இன்றி பணிகளை மேற்கொண்டதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது குறித்து விசாரிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் பேராசிரியர் ரூபா குணசீலனை பணியிடை நீக்கம் செய்து உயர் கல்வித்துறை செயலாளர் சங்கரன் உத்தரவிட்டார். இதன்பேரில் பேராசிரியர் ரூபா குணசீலனை பணியிடை நீக்கம் செய்து பல்கலைக்கழக பதிவாளர் ராஜவேல் நடவடிக்கை எடுத்துள்ளார்.
