குஜராத்தில் பாஜக நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த நபருக்கு உதவி செய்ய முன்வராமல், பாஜக தலைவர்கள் அப்படியே அமர்ந்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வதோராவில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, பாதுகாவலர் ஒருவர் மயங்கி விழுந்தார். ஆனால், ஜெ.பி. நட்டா பேச்சை நிறுத்தவில்லை என தெரிகிறது.
மேலும், மேடையில் அமர்ந்திருந்தவர்கள் ஒரு அணு கூட அசையாமல் அப்படியே அமர்ந்திருந்த நிலையில், அருகில் இருந்த நபர் உதவி செய்தார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், உதவிக்கு வராத பாஜகவினரின் |செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
