கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பகுதியில் தாயும், மகளும் வசித்து வருகிறார்கள். அவர்கள் 2 பேருக்கும் இடையே குடும்ப பிரச்சனை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த தகராறு தொடர்பாக மூதாட்டி, தனது மகள் மீது காவூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பிறகு போலீசார் அவர்கள் 2 பேரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இருப்பினும் அவர்களின் சண்டை தொடர்ந்து கொண்டே இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கிராம பஞ்சாயத்து அலுவலகத்துக்கு மூதாட்டி சென்றுள்ளார். அங்கு அவரது மகளும் வந்ததால் அங்கு பிரச்சனை ஏற்பட்டது. அந்த சமயத்தில் பெற்ற தாய் என்றும் பாராமல் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து மூதாட்டியை அந்த பெண் வெளியே தள்ளி தனது செருப்பால் தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் மூதாட்டி லேசான காயம் அடைந்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
