செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சகுந்தலா மணி. இவர் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் அதிமுக கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் அதிமுக கவுன்சிலர் சகுந்தலா மணி உறவினர் வீட்டுக்கு சென்றதால், நேற்று இரவு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவு மற்றும் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 சவரன் தங்க நகை ஒரு லட்சம் ரொக்க பணம் திருடி சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, அதே தெருவில் அருகில் இருந்த தமீம் பாஷா வீட்டின் முன்பக்கம் கதவை மட்டும் உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் வீட்டின் உள்பகுதியில் ஏதும் பணம் நகை இல்லாததால் மர்ம நகர் அங்கிருந்து ஏமாந்து திரும்பி சென்று உள்ளனர்.
அடுத்து அடுத்து ஒரே தெருவில் இரு வேறு வீடுகளில் கொள்ளை சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். மேலும் தகவல் அறிந்து வந்த அச்சிறுப்பாக்கம் போலீசார் கைரேகை நிபுணர்களின் துணையுடன் திருட்டு சம்பவம் குறித்து அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
