கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று(28.11.2025) மதியம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நாளை (29.11.2025) கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர் மாவட்டத்தில் நாளை கல்வி நிறுவனங்கள் சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
